9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளை திறந்த மாநிலம் – 40 சதவீத வருகை!

வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:10 IST)
கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 40 சதவீதம் மட்டுமே வருகை பதிவாகியுள்ளது.

கொரோனா பரவலால் மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. அதையடுத்து கொரோனா பரவல் குறைந்தததாலும் தேர்வுகள் நெருங்குவதாலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்ததை அடுத்து கொரோனா பரவல் மீண்டும் அதிகமானதால் பள்ளிகள் மூடப்பட்டன.

கர்நாடகாவில் நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.  10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நெருங்குவதால்  ஜனவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முதலமைச்சர் எடியூரப்பா சம்மதம் தெரிவித்தார். அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தையும் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று 40 சதவீத மாணவர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்