டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை.. ஆளுநர் நிறுத்திவைப்பு..!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (12:12 IST)
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்த நிலையில் அதனை ஆளுனர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை தமிழக அரசு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல்  ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்