நீட் குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பியவர்: மத்திய அரசு பணியில் இருந்து நீக்க கோரி மனு..!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:50 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் கவர்னர் மாளிகையில்  உரையாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது கையெழுத்து விடுவார்கள் என ஒருவர் கேள்வி எழுப்பிய போது என்னிடம் நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்து இடும் உரிமை இருந்தால் அதில் நான் எப்போதுமே கையெழுத்து இட மாட்டேன் என கூறினார். 
 
இதனை அடுத்து அந்த நபர் வெளியே வந்து ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி அளித்து நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். இது பெரும் சர்ச்சையானது.
 
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய அம்மாச்சியப்பன் என்பவர் மத்திய அரசு ஊழியர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 
 
மத்திய அரசு நிறுவன ஊழியராக இருந்து கொண்டு பேட்டி அளித்ததாக அவர் மீது சேலம் உற்காலை நிர்வாக இயக்குனரிடம் பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் புகார் அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்