தென்மாவட்ட தேர்வர்களுக்கு, TNPSC தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (17:39 IST)
தங்களில் சமீபத்தில் பெய்த  கன மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து தென் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு உள்பட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக  ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த டிஆர்பி தேர்வையும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில்  தென் மாவட்ட தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு,
ஜனவரி 7 அன்று நடக்க இருந்த TRB தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு TNPSC ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்,
 
 எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை தமிழக அரசு ஒத்திவைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்