கஞ்சா விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது!? – ஆபரேஷன் கஞ்சா 2.0!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:41 IST)
தமிழகத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க ஆபரேஷன் கஞ்சா 2.0 திட்டத்தை செயல்படுத்துவதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் சட்டத்திற்கு புறம்பாக பல பகுதிகளில் இந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் போலீஸ் அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தில் தமிழ்நாடு போலீஸ் நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் பல டன் கஞ்சா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது ஆபரேஷன் கஞ்சா 2.0 நடவடிக்கையை காவல்துறை தொடர்ந்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்களை கண்டறிய அப்பகுதிகளை சேர்ந்த சிலரை இணைத்து புதிய வாட்ஸப் குழுக்கள் உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா, குட்கா விற்பனையில் சிக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்