பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு குறித்து திருச்சி சிவா நோட்டீஸ்!

செவ்வாய், 29 மார்ச் 2022 (08:41 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ. 105.94 எனவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 67 காசுகள் உயர்ந்து ரூ.96 எனவும் விற்பனையாகிறது.
 
இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்