”அட..நம்ம ஊர் போலீஸா இது??” வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கும் காவல்துறையினர்

Arun Prasath
திங்கள், 25 நவம்பர் 2019 (11:33 IST)
இரவு நேரத்தில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போலிஸார் தேநீர் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய காலங்களில் சாலை விபத்து என்பது அடிக்கடி நடக்ககூடிய ஒன்றாக ஆகிவிட்டது. குறிப்பாக இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டிகள் உட்பட பலருக்கும் தூக்க கலைப்பால் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன.

இதனால் பரிதாபமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும், சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அரியலூர் போலீஸார் ஒரு ஆச்சரியமூட்டும் காரியத்தில் ஈடுபட்டனர். அதாவது இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களுக்கு தேநீர் வழங்கி புத்துணர்ச்சி அளித்துள்ளனர். மேலும் அவர்களின் முகங்களை கழுவ சொல்லி தண்ணீரை பருகவும் சொல்லியுள்ளனர்.

இந்த செய்தி தமிழக காவல்துறை மீது நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ளது. மேலும் இது தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்