இந்நிலையில் திடீரென இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் ” "நேரடியாக மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என ஒரு வாரத்திற்கு முன்பு முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான செய்திகள் அதற்கு முரணாக வருவது ஏன்? அமைச்சரவைக் கூட்டத்தில் அப்படியொரு முடிவை எடுக்கவில்லை என முதலமைச்சர் அறிவித்திட வேண்டும்.” என கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுகவுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ கண்ணாக இருப்பது மாநகராட்சி மேயர் பதவிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. சொல்லப்போனால் யாருக்கு எத்தனை மேயர் பதவிகள் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இரு கூடாரங்களிலும் போட்டிகள் இருப்பதாக செய்தி. இந்நிலையில் அதிமுக இப்படி அவசர சட்டம் நிறைவேற்றியிருப்பது அவர்களது தோல்வி பயத்தினால்தான் என எதிர்கட்சிகள் பேசிக் கொள்கின்றன.