தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மெல்ல குறைந்து வரும் நிலையில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதே சமயம் கரும்பூஞ்சை தொற்று பாதிப்புகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்றால் 3,300 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். கரும்பூஞ்சை தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்தால் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கரும்பூஞ்சை ட்தொற்றுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துகளும் கைவசம் உள்ளன” என தெரிவித்துள்ளார்.