ஓகி புயல் எதிரொலி: குரூப் 4 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (08:10 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கையை நவம்பர் 14ம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 13 என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக மின்சாரம் சுமார் ஒருவார காலம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆன்லைனில் இந்த பணிக்கு பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை

இதனால் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை குமரி மாவட்டத்தினர் விடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் நலனைக் கருதி குரூப்-4 தேர்விற்கு விண்ணபிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் 21ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்