துபாய் செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்! கூடவே புறப்பட்ட அன்பில் மகேஷ்!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (11:50 IST)
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவிற்காக துபாய் செல்லும் நிலையில் அவர்களோடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் செல்கிறார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் திறன் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அவ்வாறாக ஆன்லைனில் நடத்தப்பட்ட விநாடி – வினா போட்டியில் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு துபாய்க்கு கல்வி கண்காட்சிக்காக அழைத்து செல்லப்படுகின்றனர். 68 மாணவர்கள் துபாயில் 4 நாட்கள் தங்கியிருந்து கல்வி சுற்றுலாவை மேற்கொள்கின்றனர்.

இதற்காக இன்று இந்த மாணவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்படுகின்றனர். அவர்களோடு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கல்வி சுற்றுலாவில் கலந்து கொண்டு துபாய்க்கு செல்கிறார். துபாய் கிளம்புமுன் மாணவர்கள் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்