தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் தகவல்

திங்கள், 7 நவம்பர் 2022 (13:20 IST)
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணை இன்று மதியம் இரண்டு முப்பது மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
 
2022 - 23 ஆம் ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் கால அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது
 
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று பிற்பகல் இந்த அட்டவணையை வெளியிடுகிறார்
 
கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த கல்வி ஆண்டில் பொது தேர்வு மீண்டும் நடைபெற்றது என்பது தெரிந்ததே
 
அதேபோல் இந்த ஆண்டும் மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்