அரசு விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ராதாகிருஷ்ணன்... இவர் பேச காரணம் என்ன??

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (13:21 IST)
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக நிலம் வழங்கவில்லை என்பது தவறானது என ராதாகிருஷ்ணன் பேட்டி. 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தே சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டிய நிலையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பெறப்பட்ட நிலப்பகுதியில் சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது.
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஜப்பான் ஜைக்கா நிறுவனங்களிடையே கடன் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. கடன் கிடைத்த பின்னர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் எனவும் தமிழக அரசு இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக நிலம் வழங்கவில்லை என கூறப்பட்டது. 
 
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான இடங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. நிலம் வழங்க அரசு ஒத்துழைக்கவில்லை என்ற தகவல் தவறானது என தெரித்துள்ளார். சென்னை சுகாதாரத்துறை செயலாளர் எய்ம்ஸ் குறித்து தானாக வந்து பேசியிருப்பது சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ஒருவர் பேசுவதற்கு அவசியம் இல்லாத பட்சத்தில், இவர் இது குறித்து பேசியிருப்பது அரசு விஷயத்தில் இவர் தலையிடுவது போல இருப்பதாக பேசிக்கொள்ளப்படுகிறது. அதோடு இது குறித்து இவர் பேச காரணம் என்ன எனவும் குழப்பம் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்