இன்று கனமழை பெய்யும் 7 மாவட்டங்கள் எவை எவை? வானிலை ஆய்வு மையம்

வெள்ளி, 18 டிசம்பர் 2020 (07:01 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் அடுத்தடுத்து வந்த இரண்டு புயல்கள் காரணமாகவும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது என்பதும் வரும் கோடையில் இந்த ஆண்டு பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 
 
குறிப்பாக வடக்கு கடலோர மாவட்டங்களில் உள்ள பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதில் விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகம் போலவே புதுவையிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்