கேரளாவிற்கு ஒரு நாள் ஊதியத்தை அளிக்கும் தமிழக அரசு ஊழியர்கள்...

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (12:13 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்காக தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை நிதியாக அளிக்க முன்வந்துள்ளனர்.

 
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளிலில்லாத அளவுக்கு கனமழை பெயது வருகிறது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவுகளின் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர் தங்கள் உடமைகள் மற்றும் வீடுகளை இழந்துள்ளனர். 
 
எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் திரையுலகினர் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.  அதேபோல், தமிழகத்தில் இருந்து பலரும் ஆன்லைன் மூலமாக கேரள மாநிலத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கேரள மாநிலத்திற்கு உதவ தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வந்துள்ளனர். அதாவது, தங்களின் ஒருநாள் ஊதியத்தை கேரளாவிற்கு அளிக்கும் படி அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்