மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது - தமிழக அரசு வாதம்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (13:43 IST)
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றத்தில் தற்போது தமிழக அரசு கூறி வருகிறது.

 
காவிரி நீர் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு  4 எம்.டி.சி நீரை தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மழை பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
 
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12 -ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்த விவகாரம் பற்றி இப்போது விவாதிக்க முடியாது என மத்திய அரசு தரப்பில் வாதிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை வருகிற 14ம் தேதிக்கு ஒத்தி வைத்ததும். மேலும், அன்று மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதையடுத்து, தனது தரப்பு வாதத்தை முன்வைத்த தமிழக அரசு “ தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது.  தீர்ப்பை நிறைவேற்ற தவறியவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்” என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்