தாமாக முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்: அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:44 IST)
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர்களது வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்துள்ளதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 
சொத்துக் குறிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் கிழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி உள்ளார். 
 
இதனை அடுத்து தங்கம் தன்னரசு கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 25ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இந்த நிலையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை களங்கப்படுத்துவதற்கு சமம் என்றும் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்