சொத்துக்குவிப்பு வழக்கில் 2 அமைச்சர்கள் விடுதலை.. தானாக முன்வந்து வழக்கை எடுத்த சென்னை ஐகோர்ட்..!

புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:39 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக அமைச்சர்கள் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக  சமீபத்தில் நீதிமன்றம் தெரிவித்தது. 
 
இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர்  ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ளது.
 
 இரண்டு அமைச்சர்களுமே ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்ய தாமாக முன்வந்து எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த இரண்டு வழக்குகளும் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்