4 ரூபாய்க்கு சேலை, வேஷ்டி, சட்டை: திருவாரூர் ஜவுளிக்கடையில் குவிந்த பொதுமக்கள்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:35 IST)
4 ரூபாய்க்கு சேலை, வேஷ்டி, சட்டை: திருவாரூர் ஜவுளிக்கடையில் குவிந்த பொதுமக்கள்!
திருவாரூரில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் 4 ரூபாய்க்கு சேலை வேட்டி சட்டை ஆகியவை விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் அந்த கடையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்ற பகுதியில் பிரபல ஜவுளி கடையின் நான்காம் ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு 4 ரூபாய்க்கு சேலை வேட்டி சட்டை உள்பட பல ஜவுளிகள் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆடைகளை வாங்க அந்த ஜவுளி கடைக்கு முண்டியடித்து பொதுமக்கள் சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 
 
கடை திறந்தவுடன் அங்கு மலை போல் குவிக்கப்பட்ட ஆடைகளை பொதுமக்கள் தேர்வு செய்து 4 ரூபாய்க்கு வாங்கி சென்றனர். இந்த நிலையில் 4 ரூபாய்க்கு ஆடை வாங்க ஆசைப்பட்ட சிலர் தங்களுடைய விலை உயர்ந்த செல்போன், பர்ஸ் உள்ளிட்ட பொருள்களை தொலைத்ததாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்