திருப்பதி பிரம்மோத்ஸவம்.. தமிழகத்தில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (15:16 IST)
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதியில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெறும் என்பதும் இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருப்பதியில் குவிந்து விடுவார்கள் என்பதும் தெரிந்ததே.

அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது

 இந்த சிறப்பு பேருந்துகளை திருப்பதி செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்,.

 அக்டோபர் 13ஆம் தேதியிலிருந்து அதாவது நாளை முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கு https://www.tnstc.in/ என்ற இணையதளம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ செயலின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்