துரைமுருகன் கிளப்பிய பிரச்சனை: திடீரென ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்; காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:34 IST)
திமுக தோழமைக் கட்சிகளின் கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்தால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் திருமாவளவன் ஸ்டாலினை தற்பொழுது சந்தித்து பேசி வருகிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், திமுக தங்களுக்கு தோழமைக்கட்சிகள் மட்டும் தான் கூட்டணி கட்சிகள் அல்ல என கூறினார். கூட்டணி குறித்து ஸ்டாலின் தான் விளக்க வேண்டும் என கூறினார். 
அடுத்ததாக செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுகவுடன் இப்போதைக்கு தேர்தல் கூட்டணியில் இல்லை என்று கூறினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
 
சமீபத்தில் திருமாவளவன் எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோரை சந்தித்தது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறினார்.
 
இதற்கிடையே திருமாவளவன் தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்