சரக்கு வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு: தமிழக அரசு அடடே ப்ளான்!

Webdunia
புதன், 6 மே 2020 (13:38 IST)
டாஸ்மாகில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் முன்பு மது பிரியர்கள் கூட்டமாய் குவிவதால் சமூக இடைவெளியை பேணுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் தமிழத்திலும் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு அரசு மாதுபானங்களின் விலையை ரூ.20 உயர்த்தியுள்ளது. சாதாரண 180 மிலி மதுபானங்கள் அடக்க விலையோடு ரூ.10 அதிகமாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் பானங்கள் ரூ.20 அதிகமாகவும் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது டாஸ்மாகில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன விவரம் பின்வருமாறு... 
 
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 
40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை
40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்