மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (21:22 IST)
கோரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
 
மின்கட்டணம் செலுத்த அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
மின்கட்டணம் செலுத்த மே மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதை நீடித்து உள்ள மின் வாரியம் ஜூன் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏப்ரல் மாதம் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ள உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணம் விதிக்கப்படும் என்றும், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்பு தொகை செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்