மாநிலங்களவையில் மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்: மொத்தம் 23 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (13:19 IST)
மாநிலங்களவையில் ஏற்கனவே 20 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ள எம்பிக்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி உயர்வு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
 இதனை அடுத்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மாநிலங்களவையில் 20 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 3 எம்பிக்கள் சட்டம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மூன்று எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதால் மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்