அடேய்! நான் உயிரோடு தாண்டா இருக்கிறேன்.! தூத்துக்குடி சுப்பிரமணியன் வீடியோவால் பரபரப்பு.!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (11:14 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா என்ற இடத்தில்  கடந்த வியாழக்கிழமையன்று  நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


 
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரது இறுதி சடங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 
 
இந்நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக  தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் தூத்துக்குடி சுப்ரமணியன், தான் உயிரோடு இருப்பதாகவும் அது தெரியாமல் எங்க ஊர் மக்கள் எல்லோரும்  நான் இறந்து போனதாக போஸ்டர் ஒட்டியும், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் ஸ்டேடஸ் வைத்துள்ளனர் என்று பேசியுள்ள  வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது சுப்பிரமணியம் தானா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அப்படி அவர் உயிரோடு இருந்தால் அவர் ஏன் இன்னும் அவரது வீட்டிற்கு தகவல் சொல்லவில்லை. ஒரு வேலை அவர் உயிரோடு இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கூறியதற்கு அவர் இந்த விடியோவை வெளியிட்டாரா என்ற பல கேள்விகளுக்கு பதிலில்லாமல் புரியாத புதிராக இருக்கிறது.
 
அதே போல இந்த வீடியோவில் இருக்கும் நபரும் காக்கி உடையில் இருப்பது தான் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ ஒருவேளை சுப்பிரமணியன் உயிரோடு இருந்தால் அது அவரது குடும்பத்தினருக்கும் நம் அனைவருக்கும் மன நிம்மதியை அளிக்கும். 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்