இது ஒரிஜினல் புலி நகம்.. வாய்விட்டு கம்பி எண்ணும் தொழிலதிபர்! - இன்ஸ்டா பேட்டியால் சிக்கியது எப்படி?

Prasanth Karthick
திங்கள், 20 ஜனவரி 2025 (11:31 IST)

இன்ஸ்டாகிராம் பிரபலமான கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்பவர் புலி நகம் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக வனத்துறையினர் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

சமீப காலமாக இன்ஸ்டாகிராம், யூட்யூப் பிரபலங்கள் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டு சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இளைஞர் ஒருவர் கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை சமீபத்தில் பேட்டி ஒன்று எடுத்திருந்தார். அதில் அவர் கழுத்தில் அணிந்திருந்த புலி நகம் பற்றி கேட்டபோது, அது ஒரிஜினல் எனவும், ஆந்திராவிலிருந்து வாங்கியதாகவும் கூறியிருந்தார்.

 

இந்த வீடியோ வைரலான நிலையில் தொழிலதிபர் வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தியதில் மான் கொம்பு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து அவர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். ஒரிஜினல் புலி நகம் என்று வீடியோவில் பேசி தொழிலதிபர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்