கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் நடந்த விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தனது தந்தைக்கு காய்ச்சல் இருந்தபோது பசு கோமியத்தை கொடுத்ததால் அவர் அவரது காய்ச்சல் 15 நிமிடங்களில் போய்விட்டது என்றும் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை பசு கோமியம் எதிர்த்து சிறந்த மருந்தாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இது போன்ற தவறான கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது. கோமியத்தை அந்த காலத்தில் இருந்து தெளிப்பது மட்டும் தான் வழக்கம், அதை குடிப்பது வழக்கம் இல்லை, இதை ஒரு ஐஐடி இயக்குனரே கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற மூடநம்பிக்கைகளை பத்திரிகையாளர்கள் தான் தகர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.