வறட்டு கவுரவம் பார்க்காமல் துணிச்சலான முடிவு: ரஜினி குறித்து திருமாவளவன்,

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (14:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் தனது உடல்நிலை காரணத்தினால் ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் அறிக்கை ஒன்றின் மூலம் கூறியிருந்தார்
 
இந்த அறிவிப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியபோது ’வறட்டு கவுரவம் பார்க்காமல் ரஜினிகாந்த் ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார் 
 
கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் எந்த தாக்கமும் ஏற்பட்ட போவதில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி கட்சி தொடங்கி பாஜக நிர்ப்பந்தத்தை அடுத்து உடல்நலக்குறைவால் காரணம் காட்டி தற்போது அதனை நிராகரித்து உள்ளார் நடிகர் ரஜினிகாந்த் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மேலும் ஒரு சில அரசியல் தலைவர்கள் ரஜினியின் அரசியல் முடிவு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்