மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த திருமாவளவன்.. என்ன காரணம்?

Mahendran
செவ்வாய், 11 மார்ச் 2025 (12:31 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் எம்.பி. ரவிக்குமார் அவர்களும் உடன் இருந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மத்திய அரசின் 16வது நிதி குழு, மாநிலங்களுக்கான வரி பகிர்வை குறைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும், அதன்படி மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41% ல் இருந்து 40% ஆக குறைக்கப்பட போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 41% லிருந்து 50% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், நிதி பகிர்வு குறைக்கப்பட்டால் மாநிலங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கும் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சரைத் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்