சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன், "அடுத்த முதலமைச்சர் இவர் தான்" என்று சில ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்றும், "இப்போதே விஜய் கட்சிக்கு 20% - 24% வாக்குகள் கிடைக்கும்" என்று போலியாக எழுதுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
"இன்னும் ஒரு தேர்தலையும் சந்திக்கவில்லை, தேர்தலில் போட்டியிடவில்லை. வாக்கு எவ்வளவு? வாக்கு சதவீதம் அந்த கட்சிக்கு எவ்வளவு? என்பது கூட யாருக்கும் தெரியாது. ஆனாலும், இந்த சமூகமும் ஊடகமும் இத்தகைய அணுகுமுறையை கொண்டுள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.