உருவ பொம்மை எரித்த போது, திடீரென நிர்வாகி ஒருவர் மீது தீப்பற்றியதாகவும், உடனே அங்கு இருந்தவர்கள் தீயை அணைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவருக்கு தீக்காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.
மேலும், இந்த தீ விபத்தில் திமுக செயலாளர் சந்திரசேகர் என்பவரின் வேட்டியிலும் தீ பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவர் வேட்டியை கழற்றி வீசியதால், உடலில் தீ பரவாமல் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.