வேதா நிலையத்தில் என்னென்ன இருக்கிறது ??

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:04 IST)
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம்  திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவு இல்லத்தில், மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளன. அதில், 8,376 புத்தகங்கள், 394 நினைவு பொருட்கள், 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகள், 601 கிலோ 424 கிராம் கொண்ட 867 வெள்ளிப் பொருட்கள் உள்ளன. 
 
மேலும், 11 டி.வி., 10 பிரிட்ஜ், 38 ஏ.சி. எந்திரங்கள், 556 மேஜை, நாற்காலி போன்ற தளவாடங்கள், 6,514 சமையல் பொருட்கள், 12 சமையல் ரேக்குகள் மற்றும் தளவாடங்கள், 1,055 காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள், 15 பூஜை உபகரணங்கள் இருக்கின்றன. 
 
இதனுடன் 10 ஆயிரத்து 438 உடைகள், துண்டு, படுக்கை விரிப்பு, தலையணை உறை, செருப்புகள். 29 போன்கள் மற்றும் செல்போன்கள், 221 சமையலறை எலக்ட்ரானிக் சாதனங்கள், 251 எலக்ட்ரானிக் பொருட்கள், 653 கோர்ட்டு ஆவணம், உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள், 65 சூட்கேஸ், 108 அழகுசாதன பொருட்கள், 6 கடிகாரங்களும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்