மதுரை மாவட்டம்,விக்கிரமங்கலம் அருகே , முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.
இதனால்,அப்பகுதி கிராம மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதி கிராம மக்கள், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குடிநீர் வசதி கேட்டும், ஏற்கனவே குடிநீர் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட போர்வெல் செயல்படுத்த வேண்டியும்,மனு கொடுத்தனர்.
ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் விக்கிரமங்கலம் செக்கனூரணி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விக்கிரமங்கலம் போலீசார் மறியல் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர் இதனால், இப்பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
எது எப்படியோ பொதுமக்களின் வாழ்வாதாரமான குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு உடனடியாக காண வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.