காவல்துறையினர் சாமிக்குச் சமம் - பிரபல நடிகை

Webdunia
திங்கள், 11 மே 2020 (18:09 IST)
காவல்துறையினரின் சேவைய மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அவ்வப்போதுதான் பிரபலங்கள் அதை மக்களிடம் சொல்லும்போது அதற்காக கணமும் கூடுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,  போலீஸாருக்கு மிகப்பெரிய நன்றிகள்.. நீங்கள் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் நாங்கள் பார்த்துக் கொண்டுஇருக்கிறோம். அதனால் உங்களுக்கு நாங்கள் அவ்வளவு கடமைப்பட்டுள்ளோம். உங்கள் குடும்பத்தையும் உங்கள் உயிரையும் பாதுகாக்காமல் மக்களுடைய உயிரைப் பாதுகாத்து வருகிறீர்கள், அதற்காக ஒரு பெரிய நன்றி! இந்தக் கடுமையான வெயிலில் நின்று கொண்டு நீங்கள் உங்களுடைய வேலையைப்  பார்த்து வருகிறீர்கள் அதற்காக ஒரு நன்றி என போற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்