மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:53 IST)
பாரத பிரதமர்  மோடி வாங்கி வந்ததே திருட்டு சிலைதான் என்று பேசி எச். ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதமர் டோனி அப்பாட் இந்தியா வந்த போது மோடிக்கு இரண்டு நடராஜர் சிலைகளை பரிசளித்தார். அந்த சிலைகளைக் குறித்துதான் எச்.ராஜா  பேசியிருக்கிறார்.

அவர் கூறியுள்ளதாவது:
 
தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிலையைத்தான் இங்கிலாந்து பிரதமர் இந்தியாவுக்கு வந்த போது பரிசளித்திருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
தற்போது தமிழகமெங்கும் ஐஜி பொன் மாணிக்கவேல் காணாமல் போன சிலைகளைக் குறித்து விசாரணை செய்து இந்த சிலைகளை மீட்டு வரும் நிலையில் எச் ராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்