எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - தயாநிதி மாறன் எம்.பி. கண்டனம்!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (16:06 IST)
திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தயாநிதி மாறன் எம்.பி. கண்டனம்.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதலாகவே கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி போன்றவற்றை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின.

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் சபாநாயகரை சூழ்ந்து கொண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உட்பட 5 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்றும் மக்களவை கூட்டத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிராக எதிர்கட்சி எம்,.பிக்கள் அமளி செய்த நிலையில் திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 11 எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்

திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தயாநிதி மாறன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயலும் நிகழ்வாகும். இடைநீக்கத்தை திரும்ப பெற்று மீண்டும் ஜனநாயக கடமையாற்ற அவர்களை அனுமதிக்க வேண்டும் என தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்