தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையில் இருந்து தனியரசு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை பல்லாவரத்தில் கொங்கு பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கொங்கு பேரவை அமைப்பாளர் தனியரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக கூறி, அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். இதற்காக தீர்மானமும் நிறைவேற்றினர்.
இந்த கூட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சி.ஆறுமுகம் மற்றும் தா.கார்வேந்தன், சென்னை, நாமக்கல், திருச்சி, கோவை, தஞ்சாவூர், கரூர், திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.