வெத்து பில்டப், கூட வேலைக்கு ஆகாத 2 ஜால்ரா: தினகரன் இமேஜ் டோட்டல் டேமேஜ்...

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (13:34 IST)
தினகரன் தன்னை பெரிய அரசியல்வாதியாக காட்டிக்கொண்டாரே தவிர கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். 
 
டிடிவி தினகரன் அமமுகவை உருவாக்கிய போது அவருக்கு ரைட் ஹாண்டாக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி, அதே போல் லெஃப்ட் ஹாண்டாக இருந்தவர் தங்க தமிழ்செல்வன். இப்போது இருவரும் திமுகவில் இணைந்துவிட்டனர்.  
 
செந்தில் பாலாஜி பெரிதாக எந்த பிரச்சனையும் மேற்கொள்ளாமல் சைலெண்டாக திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு திமுக எம்.எல்.ஏ ஆகிவிட்டார். ஆனால் தங்க தமிழ்செல்வன், தினகரனை பற்றி சில பல விமர்சனங்களை முன்வைத்து பின்னர் திமுகவில் இணைந்தார். 
கட்சியில் சேர்ந்த பிறகு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே திருச்சி சிவா, ஆ ராசா ஆகியோர் அப்பதவியில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தங்கத்துக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் திமுகவை பலப்படுத்தும் முயற்சியில் தங்க தமிழ்செல்வன் ஈடுபட்டுள்ளார். 
 
இந்நிலையில் அவர் தினகரன் குறித்து பேசியிருப்பது அதிர்ச்சிய ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது, அவர் கூறியதாவது, டிடிவி தினகரன் தன்னை ஒரு பெரிய அரசியல் தலைவர் என இமேஜை வளர்த்து கொண்டாரே தவிர, கட்சியை வளர்க்க போதுமான ஆர்வம் காட்டவில்லை. 
தனது அருகில் இரண்டு ஜால்ராக்களை வைத்து கொண்டு, அவர்களின் பேச்சை கேட்டு செயல்டுகிறார். இதனால்தான் அக்கட்சி அழிந்து வருகிறது. சசிகலா சிறையில் இருந்து வருவதற்குள் அமமுக அழிந்துவிடும். டிடிவி தனது ஆணவத்தினாலேயே கட்சியை அழித்துவிட்டார். அவரை நம்பியவர்களையும் ஏமாற்றிவிட்டார் என்று பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்