தைப்பூச பூசத்தை முன்னிட்டு இன்று பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் முருகனை கும்பிட்டு வருகின்றனர்.
பழனி கோயிலில் இன்று, அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி, காலை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிப்ரவரி 10ஆம் தேதி வெள்ளியன்று தேரோட்டம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ள பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அடுத்து வரும் 20 நாட்களில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தைப்பூச திருவிழாவை ஒட்டி, மலை கோயிலில் மூன்று நாட்களுக்கு சிறப்பு தரிசனம் கட்டணம் ரத்து செய்யப்படும். திருத்தணியைப் போலவே, பழனியிலும் தேரோட்ட நாளில் அருகிலுள்ள இடங்களில் இருந்து பக்தர்களுக்காக இலவச பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.