எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

Prasanth Karthick

புதன், 5 பிப்ரவரி 2025 (14:45 IST)

தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர், கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த் பாரபட்சமுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில் சமீபத்தில் மாவட்ட நிர்வாக பதவிகளுக்கான பட்டியலை விஜய் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கட்சியில் நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என கட்சிக்குள்ளேயே பூசல் கிளம்பியுள்ளது. சமீபத்தில் தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் மாவட்ட தலைமை தன்னை குறித்து அவதூறுகளை மேலிடத்தில் பரப்புவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் என்பவர், பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தான் கடந்த 12 ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் இளைஞரணி துணைச் செயலாளராக பணியாற்றி வந்ததாக கூறியுள்ளார். தற்போது தவெகவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதில் பெரும்பாலும் சாதி பார்த்து வழங்கப்படுவதாகவும், அதை பொதுச்செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்தே செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும் அவர் “தளபதியை சுத்தி தப்பு நடக்குது. ஆனந்த் சாரை எல்லாரும் ரொம்ப புகழ்ந்து பேசுகிறார்கள். தலைவரும் அவரை நம்புகிறார். ஆனால் அதற்கு புஸ்ஸி ஆனந்த் உண்மையாக இருக்கிறாரா? எங்களை நாய் மாதிரி நடத்துகிறார்” என்று ஆவேசமாக பேசியுள்ளார். தொடர்ந்து தவெகவை சேர்ந்த பலரும் இப்படி புகார் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விஜய் கவனத்திற்கு செல்லுமா என காத்திருக்கிறார்களாம் மேலும் பல தவெக நிர்வாகிகள்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்