TET தேர்விற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!!!

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (12:06 IST)
டெட் தேர்விற்காக விண்ணப்ப தேதி ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கான TET தேர்வு சம்மந்தமான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. ஆன்லைனில் கடந்த 15ந் தேதி முதல் இந்த தேர்விற்காக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
 
தேர்விற்காக விண்ணப்பிக்க ஏப்ரல் 5(இன்று) தான் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பதாரர்களுக்கு (OTP) செல்வதில் பிரச்சனை இருந்து வந்ததால் அவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் பலர் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.
 
இதுகுறித்து அவர்கள் புகார் அளிக்கவே, தேர்விற்காக விண்ணப்ப தேதியை ஏப்ரல் 12 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
TETஐ விண்ணப்பிக்க  http://trb.tn.nic.in/

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்