பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (08:15 IST)
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு நடைபெறும் என்றும், அதற்கு நவம்பர்1 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,582 ஆக உயா்த்தி இருப்பதால் விண்ணப்பிக்கும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இதன்படி   பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்ற நவம்பர் 30-ம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில், டிசம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மாநகராட்சியில் 86 பணியிடங்கள், பள்ளிக் கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144 பணியிடங்கள், , தொடக்கக் கல்வித் துறையில் 78 பணியிடங்கள், என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்