தேநீர் விருந்து விஜய் மிஸ்ஸிங்.. யார் யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

Siva
திங்கள், 27 ஜனவரி 2025 (08:36 IST)
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலைவர்களுக்கு வைத்த தேநீர் விருந்தில் பாஜக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் விஜய்க்கு அழைப்பு விடுத்தும் அவர் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுனரின் தேநீர் விருந்தை  புறக்கணித்தது என்பது தெரிந்ததே.  ஆனால் அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இந்த விதை நீர் விருந்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த விருந்தை புறக்கணித்து உள்ளார்.

 பாஜக தலைவர் அண்ணாமலை ,சரத்குமார், தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  உள்பட பலர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்ததால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மதியமே இந்த தேநீர் விருந்தை விஜய்  புறக்கணிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் எதற்காக கலந்து கொள்ளவில்லை என்ற விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்