பொதுவாக ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே அழைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இதுவரை ஆளுநரை தேநீர் விருந்துக்கு திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத, கட்சி ஆரம்பித்து ஒரே வருடம் மட்டுமே ஆகியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது மற்ற அரசியல் கட்சிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.