கல்லூரி மாணவர்கள் டார்கெட்! போதை மாத்திரை இளைஞர் கைது! – போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல்!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (08:39 IST)
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருள் விற்று வந்த இளைஞரை கைது செய்து 200 போதை மாத்திரை 8 ஊசிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


 
சென்னை மதுரவாயல் ஆண்டாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (22) இவர் தனியார் கல்லூரியில் பார்மஸி நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வெளி மாநிலமான சூரத்தில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரை, ஊசிகளை ஆர்டர் செய்து சென்னைக்கு வரவழைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது நண்பர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தலை வலிப்பதாக கூறியுள்ளார். தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று போதை மாத்திரையை கரைத்து ஊசியில் ஏற்றி அவருக்கு செலுத்தியுள்ளார். இதனால் அவருக்கு மயக்கம் வாந்தி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர்  இதுக்குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த ஹரிபிரசாந்தை கைது செய்து அவரிடம் இருந்த 200 போதை மாத்திரைகள் எட்டு போதை ஊசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்