சிறந்த ஆட்சி செய்யும் மாநிலங்கள்! – தமிழகம் முதல் இடம்!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (13:28 IST)
நாட்டில் சிறப்பாக மேலாண்மை செய்யப்படும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதல் இடம் அளித்துள்ளது மத்திய அரசு.

தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த துறை சிறந்த மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் தர பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாட்டிலேயே சிறந்த நிர்வாகம் செய்யப்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

கர்நாடகா மூன்றாவது இடத்திலும், கேரளா எட்டாவது இடத்திலும் உள்ளன. மேலும் இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் குறித்த தர நிர்ணய பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்