மதுபோதையில் போலீஸை கழுவி ஊற்றிய ஆசாமி! வடிவேலு காமெடி ஸ்டைலில் எஸ்கேப்!

வியாழன், 26 டிசம்பர் 2019 (11:44 IST)
நாமக்கல் அருகே காவலர்களை கேவலமான வார்த்தைகளால் பேசிய ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் அருகே உள்ள பவானி பழைய பேருந்து நிலையம் அருகே பெண் காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அந்த பக்கமாக சென்ற கீரைக்கார தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மதுபோதையில் பெண் காவலரிடம் கேவலமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த போக்குவரத்து தலைமை காவலர் சுகுமார் அங்கு விரைந்துள்ளார். உடனே மதுபோதையில் இருந்த பிரகாஷ் பவானி ஆற்றின் அருகே இருந்த தெரு ஒன்றில் ஓடி சென்று மறைந்துள்ளார். அவரை பிடிக்க சென்ற காவலர் சுகுமாரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிய பிரகாஷ், சட்டையை கழட்டி எறிந்து விட்டு ’ஒத்தைக்கு ஒத்தை வா’ என தகராறு செய்துள்ளார். மற்ற காவலர்களும் வந்துவிடவே, வடிவேலு காமெடியில் வருவது போல ஆற்றில் குதித்து மறுகரைக்கு சென்று தப்பியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பவானி காவல்துறையினர் பிரகாஷை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்