நாளை மறுநாள் முழு கடையடைப்பு: வணிகர் சங்கம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (13:33 IST)
கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக பிரதமர் மோடி ஊரடங்கு முறையை செயல்படுத்த கூறியுள்ள நிலையில் தமிழக வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று மக்களிடையே தொலைக்காட்சி வழியாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பாதுகாப்பு ஒத்திகையாக எதிர்வரும் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு விதிமுறையை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மாநில அரசுகள் ஊரடங்கை செயல்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாளை மறுநாள் பிரதமரின் ஊரடங்கு திட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்துவதாக அறிவித்துள்ளன. பிரதமரின் ஊரடங்கு திட்டத்தை பல அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்