தமிழகத்தில் 51 காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம் – அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (18:00 IST)
தமிழகத்தில் 51 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பதவிகளில் இருந்து வந்த காவல்துறை அதிகாரிகள் 51 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு மாற்றப்பட்டவர்களில் சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த நடவடிக்கை பரபரப்புகளைக் கிளப்பியுள்ளது. இத்தனை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்