கொரோனா பீதி: தனிமைப்படுத்திக்கொண்டார் எடியூரப்பா!!

வெள்ளி, 10 ஜூலை 2020 (15:47 IST)
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் ஒரே நாளில் 23,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 21,604 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கர்நாடகாவில் 31,105 கொரோனாவால் பாதிப்பட்டுள்ளனர். இதில் கர்நாடக முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா. 
 
மேலும் அவர் அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருந்தே பணியை தொடருவார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்